இதற்கு தானே ஆசைப்பட்டாய் சௌந்தர்யா! கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதுமே டாப் ரேங்கில் இருந்து வருகிறது.

கணவரின் சந்தேகத்தால் பிரிந்து வாழும் கண்ணம்மா சுயமரியாதையுடன் தானாக சம்பாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

அவரது மகள் லட்சுமியோ, பாரதியின் குடும்பத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கத் தொடங்கியிருக்கிறார், இதனை அறிந்து கோபத்தில் இருக்கிறார் கண்ணம்மா.

எனவே இனிவரும் எபிசோடுகளில் என்ன நடக்கும்? லட்சுமிக்கு உண்மை தெரியவருமா? என படு சுவாரசியமாக செல்ல விருக்கிறது.

நேற்றைய எபிசோடில், பாரதியின் வீட்டுக்கு வருகிறார் லட்சுமி, அவளை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த சௌந்தர்யா, அவரை உள்ளே அழைத்து வருகிறார்.

அப்போது, அங்கே வருகிற மல்லிகா, இந்த பாட்டியை உனக்கு பிடிச்சிருக்காமா? என என கேட்க லட்சுமியும் பிடித்திருகிறது என்று கூறுகிறாள்.

அதோடு, ‘நான் பார்க்க அப்படியே இவர்களை மாதிரியே இருக்கேன்னு டாக்டர் அங்கிள் சொல்வார்’ என்று லட்சுமி கூறுகிறாள். சௌந்தர்யாவும் நான் சின்ன வயசுல எப்படி இருந்தேனோ அப்படியே நீ இருக்கிறாய் என்று கூறுகிறார்.

இருவரும் சந்தோஷமாக விளையாடுகின்றனர், இதற்கிடையே துளசியிடம் லட்சுமி எங்கே என கண்ணம்மா கேட்க, பாரதியின் வீட்டுக்கு சென்றிருக்கிறாள் என கூறியதும் உச்சக்கட்ட கோபத்திற்கு செல்கிறாள் கண்ணம்மா.

சின்ன பொண்ணு.. இதையெல்லாம் எப்படி தாங்குவாள்… அவளுக்காக தானே நான் ஒதுங்கி ஒதுங்கி போகிறேன் என கூறிக்கொண்டே, லட்சுமியை அழைத்து வருமாறு குமாரிடம் சொல்கிறாள்.

இந்நேரத்தில், பாரதி வீட்டில் லட்சுமியும் ஹேமாவும் படித்து கொண்டிருக்கும் போது, பாரதி வருகிறான். சௌந்தர்யா, இரண்டு குழந்தைகளையும் மடியில் வைத்துக் கொஞ்சும் பாரதியை சந்தோஷத்துடன் பார்க்கிறாள்.

பிறகு, பாரதி இரண்டு குழந்தைகளையும் மாடிக்கு அழைத்துச் சென்று விளையாடுவதுடன் எபிசோட் முடிகிறது.

இனிவரும் நாட்களில் லட்சுமிக்கு உண்மை தெரியவருமா, கண்ணம்மா கோபத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.