முடிவுபெறும் குக் வித் கோமாளி..!!

கடந்த சில மாதங்களாக பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது.

இன்று மதியம் 3 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கனி தான் டைட்டில் வின்னர் என செய்திகள் வெளிவந்த நிலையில் ஷகிலா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைவதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். ’

குக் வித் கோமாளி சீசன் 2வின் கிராண்ட் பினாலே இன்று. இதுதான் கடைசி எபிசோடு என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த பயணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.