பல் வலியால் பெரும் அவஸ்தையா?

தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும்.

எனவே இதை எப்படி எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் சரி செய்ய முடியும் என்பதை பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.

  • பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம். இது பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் வலிநிவாரணியாகவும் செயல்படும்.​
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள்.
  • வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
  • பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.
  • புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.
  • பல்களில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. கொய்யா இலைகளை தண்ணீரிலு போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வரலாம்.