சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ, அங்கு ரஞ்சன் ராமநாயக்கவிடம் குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும்ஜ் இடையில் சுமார் அரை மணி நேரம் இந்த பேச்சு நீடித்ததாகவும் கூறப்படுகின்றது .
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு கிடைத்த நாடாளுமன்ற பதவிக்கு ஐ.ம. சக்தியின் உறுப்பினரான அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.