மறைந்த தனது நண்பர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விக்ரம்

நடிகர் விவேக் தனது திரைப்பயணத்தில் சம்பாதித்தது மக்களின் அன்பை தான். அவரது மறைவு எல்லோரையும் வாட்டி வதைக்கிறது.

நீங்கள் எங்களை விட்டு பிரிந்துவிட்டீர்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அனைவரும் புலம்பி வருகிறார்கள்.

தற்போது விவேக் அவர்களின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதல் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, கவுண்டமணி, பிரியா பவானி ஷங்கர், மயில்சாமி, யோகி பாபு, தரணி என பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று நடிகர் விக்ரமிற்கு பிறந்தநாள், ஆவரோ தனது நண்பனின் மரண செய்தியால் கடும் சோகத்தில் உள்ளார்.