தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்றுமுதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பட்டு வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாயும் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
— Atharvaa (@Atharvaamurali) April 17, 2021
“கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.