பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் முதல் சீசனில் அதிக வரவேற்பை பெற்றார் நடிகை ரைசா. விஐபி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல இடத்தை பிடித்தார்.
அரைகுறை தமிழால் பேசும் பேச்சினால் சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சமுகவலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரைசா சமீபகாலமாக மாலத்தீவில் எடுத்த க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்நிலையில், கண்ணிற்கு கீழே வீக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதற்கு காரணம் படப்பிடிப்பு மேக்கப் என்று கூறப்பட்ட நிலையில் ரைசா அதற்கான காரணம் என்ன என்று இன்ஸ்டா ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ளார். சாதாரணம் பேஷியலுக்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்து எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்தார்.
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்ததால், என் முகத்தில் இப்படி ஆனது. இதனால் அவரை அழைத்து பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுத்தும் ஊழியரிடம் கேட்டல் வெளியூர் சென்றிருக்கிறார் என்று கூறியும் வந்தனர்.
இதனால் ரைசா பரிதாபத்தில் இருந்து வருகிறார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலை மாறி வருவது அவர் வெளியிடும் புகைப்படம் வழியாக காணப்படுகிறது.