வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
இதன்பின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகியே இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.