பஞ்சாப் மாநிலத்தில் தன்னிடம் படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரின் பெயர் விகாஸ் குமார்.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்த விகாஸ் குமாருக்கு, அந்த பள்ளியிலேயே படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மீது ஒரு கண் இருந்துள்ளது. அடிக்கடி அந்த மாணவியை மட்டும் தனியே அழைத்து பேசி வந்துள்ளார். மேலும் பாடம் நடத்துவதை போல அந்த மாணவியின் அருகில் சென்று தொட்டு தொட்டு பாடம் நடத்துவது புரிகிறதா என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் ஆசிரியரின் கள்ளத்தனத்தை அறியாத அந்த சிறுமி, விகாஸ் குமாரிடம் எப்போதும் போல பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார் விகாஸ் குமார். வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட தயாரான போது, குறிப்பிட்ட அந்த மாணவியை தனியே அழைத்து சிறிது நேரம் காத்திரு. ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று உள்ளது, அதை அட்டென்ட் செய்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி காத்திருக்க வைத்துள்ளார். ஆசிரியரின் பேச்சை நம்பி அந்த மாணவியும் கிளாஸில் தனியாக காத்திருந்துள்ளார். மாணவர்களை அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பின், கிளாஸில் தனியாக இருந்த மாணவியிடம் சென்ற விகாஸ் குமார், சிறிது நேரம் படம் நடத்துவது போல பாசாங்கு செய்துள்ளார்.
பின் ஒரு கட்டத்தில் பாடம் எடுப்பதை விட்டுவிட்டு தனது மொபைலை எடுத்து பலான படங்களை பார்க்கும்படி மாணவியை கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் இதற்கு உடன்படாமல் ஆசிரியரை தள்ளிவிட்டு வீட்டிற்கு புறப்பட தயாரானார். ஆனால் விடாத காமுக ஆசிரியன், மாணவியின் உடலில் தொட கூடாத இடங்களை தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். அவனின் காம பிடியிலிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிய அந்த மாணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நடந்த இந்த கொடுமை பற்றி கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாணவியின் உறவினர்கள் உடனடியாக திரண்டு பள்ளிக்கு சென்றனர்.
அங்கிருந்த விகாஸ் குமாரை போட்டு புரட்டி எடுத்து சட்டை கிழிய கிழிய துவைத்துள்ளனர். பின்னர் அவனது முகத்தில் பேனா மையை ஊற்றி திரும்பவும் அடித்து உதைத்தனர். அடித்து துவைத்த கையோடு அவனை போலீஸிடம் அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதனை அடுத்து என்ன நடந்தது என்பதை விசாரித்த போலீஸார், தகாத செயலில் ஈடுபட்ட விகாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 354-ஏ (பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்தனர்.