எல்லா பெண்களும் வருத்தமடையும் ஒரு விஷயம் பிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகு குறைந்து விட்டதாக நினைப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொய்கின்ற சருமம் தான்.
வயிறு மற்றும் மார்புப் பகுதியில் உள்ள தொய்கின்ற சருமத்தை சரி செய்ய இயற்கையாகவே சில விஷயங்களை பின்பற்றி வரலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- போதுமான தண்ணீர் அருந்துவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு பெண்கள் 14 கப் குடிக்க வேண்டும் , ஒவ்வொரு நாளும் 14-16 கப் தண்ணீர் குடியுங்க.
- பீன்ஸ், கடல் உணவு, மெலிந்த இறைச்சிகள், முட்டை மற்றும் சோயா பொருட்கள் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- வயிற்றுப்புற சருமத்தை இறுக்க கொலாஜன் மற்றும் வைட்டமின்கள் கே, ஏ, ஈ மற்றும் சி ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்ட லோசன்களை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த லோசன்கள் வயிற்றுப் பகுதி முழுவதும் இரத்த ஓட்டம் பாய உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள்.
- சில எளிதான வலிமை பயிற்சிகளான சிட்-அப்கள் மற்றும் புஷ்-அப்கள், யோகா போன்ற பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
- நீச்சல், விறுவிறுப்பான நடைபயிற்சி, பைக் சவாரி, ஜாகிங் போன்ற கார்டியோ பயிற்சிகளைச் செய்வது உங்கள் தசைகளை உயர்த்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவும்.
- ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் அவற்றைச் செய்வது சிறந்தது. தொய்கின்ற சருமம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் கொண்டு இறந்த செல்களை நீக்குங்கள். இது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தொய்கின்ற சருமத்தை தடுக்கிறது.
- ஸ்கின் ஸ்கிரப் அல்லது பாடி கோகூன் போன்ற சிகிச்சை முறைகளை ஸ்பாவிற்கு சென்று செய்து வரலாம். இது உங்க சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வர உதவி செய்யும்.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருவதன் மூலம் உங்க சருமத்தில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை போக்க முடியும். இது தளர்வான சருமத்தை இறுக்க உதவி செய்யும்.
- ஆரோக்கியமான மனநிலையை பேண முயற்சி செய்யுங்கள். உங்க மன அழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- கொலாஜன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குறித்து உங்க மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற்ற பிறகு இதை முயற்சி செய்யுங்கள்.
- கேரட், ப்ரோக்கோலி, திராட்சைப்பழம், மற்றும் பாதாமி போன்ற உங்கள் உணவில் பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள்