கர்நாடக மாநிலத்தில் உள்ள மகாதேவபுரா லட்சுமி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில், விபச்சாரம் நடைபெறுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்த நிலையில், வீட்டில் வசித்து வந்த 3 இளைஞரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்கு வங்கத்தை சார்ந்த சவுஷாத் அலி (வயது 55), ரிஜால் ஷேக் (வயது 31), சமீர் (வயது 40) என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரும் சேர்ந்து வங்காளதேச நாட்டினை சார்ந்த இளம்பெண்களிடம் பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து, போலியான ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தயாரித்து பணத்தை பறித்துக்கொண்டதும், அவர்களுக்கு வேலையை வாங்கி கொடுக்காமல் விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாரித்ததும் தெரியவந்தது.
இதனைப்போன்று மகாதேவபுராவில் உள்ள மற்றொரு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 வங்காளதேச பெண்களையும் மீட்ட காவல் துறையினர், 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களும் இளம்பெண்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து சென்னை அழைத்து வந்தது தெரியவந்தது.