ஆட்டோவை ஓட்டி தன்னுடைய 7 சகோதரிகளை காப்பாற்றி வருகின்ற பெண் ஆட்டோ டிரைவருக்காக சமந்தா தற்போது கார் ஒன்றை மிகவும் பரிசாக அளித்து நெகிழ்ச்சியூட்டி இருக்கும் சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தற்பொழுது, தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்ற சமந்தா சமீபத்தில் தனியார் Tv நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கவிதா எனும் ஒரு பெண்ணும் கலந்து கொண்டு இருக்கின்றார்.
கவிதா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்ட காரணத்தால் தன்னுடைய 7 சகோதரிகளை ஆட்டோ ஓட்டி காப்பாற்றி வருகிறார் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட சமந்தா, கார் டிராவல்ஸ் ஆரம்பித்து மேலும், முன்னேற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அந்த நிகழ்ச்சியில் உறுதியளித்திருந்தார். பாராட்டுக்களை பெற்று வருகிறது.