தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்பதும் அதேபோல் ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருள்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் ஆம்புலன்ஸ்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை கிடைக்கவில்லை.
இதனை அடுத்து குடும்பத்தினர் வேறு வழியின்றி ஒரு ஆட்டோவை பிடித்து அந்த ஆட்டோவின் மேல் பிணத்தை கயிறால் கட்டி அதில் எடுத்துச் சென்றனர் இது ஒரு வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்காமல் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.