விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை இரண்டாவது திருமணம்.!

தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் என்ற திரைப்படத்தின் மூலமாக தனக்கான அடையாளத்தை தமிழில் ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் தொடர்ந்து அவருக்கு அது போன்ற ஆக்சன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணமாக, விஷ்ணு விஷால் நடிகையிடம் காட்டிய நெருக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்து பெற்ற அந்த நடிகையும் விஷ்ணு விஷாலை ஓரம் கட்டி விட்டார்.

இதனைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒன்றாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.