இரண்டு மாணவிகளுக்கு கொரோனா!

பதுளை தாதியர் கல்லூரியின் இரண்டு மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனால் குறித்த மாணவிகளுடன் தொடர்புடைய சிலர் நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவிகளுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் அடையாளம் காணப்பட்டு தாதியர் கல்லூரியினுள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் , பதுளை தாதியர் கல்லூரி மூடப்படாது என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.