எத்தனை தொகுப்பாளர்கள் இருந்தாலும், டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தான் என்றுமே டாப், சின்னத்திரை, பெரிய திரை என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார் டிடி.
தற்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருந்தாலும், அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைகாதல் திருமணம் செய்துகொண்டவர், சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார், 2017-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் டிடி, சமீப காலமாக ஆல்பம் பாடல், மற்றும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் டிடி விருது வழங்கும் விழாவில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளன.
அதில், கேர்ள்ஸோ பாய்ஸோ யாரோ, நீங்க தப்பான ஒரு பொருளை கையில எடுத்துட்டீங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சா யோசிக்காம அதை கீழ வச்சுடுங்க. அய்யோ நம்ம கீழ வைக்கலன்னா அவன் ஏதாவது சொல்லிடுவான், இவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு அதை கையிலேயே வச்சுருக்காதீங்க.
அது உங்கள் வாழ்க்கையை எடுத்துடும். அவன் பேசிருவானோ இவன் பேசிருவானோன்னு பயந்து கீழ் வைக்காம இருக்கீங்கல்ல, நீங்க வச்சதுக்கு அப்புறம் எவனும் அதைப்பத்தி யோசிக்கக்கூட மாட்டான்.
ரெண்டு நாள்தான். தயவு செய்து தப்பான பொருள எடுத்திங்கன்னா தயவு செய்து வச்சுருங்க என உருக்கமாக பேசியுள்ளார். டிடியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த சீரியல் பிரபலங்கள் பலரும் கண்கள் கலங்கி கைகளை தட்டி வரவேற்றனர்.