சாம்பார் என்றாலே பருப்பு தான் ஞாபகம் வரும். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு என பலவிதங்களில் சாம்பார் வைக்கலாம்.
ஆனால் பருப்பு இல்லாமலும் சாம்பார் வைக்கலாம் தெரியுமா? அதுவும், மிகவும் ருசியான சாம்பார் செய்வது எப்படி? என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 5
உளுந்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீ ஸ்பூன்
வெந்தயம் – அரை டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடலை மாவு – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டீ ஸ்பூன்
கடுகு – கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான சாம்பார் ரெடி!!!