இலங்கையில் புதிய வகை கொரோனா!

இலங்கையில் அதி தீவிரமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நோய்த்தடுப்பியல் நிபுணரான நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவா்தனபுரா பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பியல் மற்றும் அணு அறிவியல் துறைத் தலைவரான நீலிகா மாளவிகே இதுகுறித்து மேலும் கூறுகையில்,

நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது, இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரஸ்களை விட அதி தீவிரமாக பரவக்கூடியது.

காற்றில் சுமாா் ஒரு மணி நேரம் வரை மிதந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கடந்த வாரம் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த புதிய வைரஸ் ஏராளமானவர்களுக்கு பரவியிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடலுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் பல்கிப் பெருக 2 அல்லது 3 வாரங்கள் வரை ஆகலாம் என்பதால், புதிய வைரசின் பாதிப்புகள் அதன் பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.