சமூக வலைதளத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை இத்தனை நாட்களாக விளாசி வந்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டனர். அவர் வேறு யாருமில்லை, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் உறவினர் தான்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்ன ட்வீட் போட்டாலும் அவரை விளாச சிலர் இருக்கிறார்கள்.
சில சமயம் அவர்களின் கமெண்ட் ரொம்ப மோசமாக இருக்கும். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெரும்பாலும் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை.
Hi everyone, praying for everyone’s good health. Wanted to comeback here only after I got some clarity on the bullying @LakshmyRamki faced here and finally, after almost one year we have solid evidence from the cyber cell & the agency we hired to do the work.
— Dr Ramakrishnan (@DrRamakrishnan8) April 23, 2021
இந்நிலையில் தான் தன்னை சமூக வலைதளத்தில் கலாய்ப்பது, கேவலமாக விமர்சிப்பது யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மியை கலாய்த்து, விளாசி வந்தது தங்களுடைய உறவினர் என்பது தெரிய வந்திருப்பதாக அவரின் கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து டாக்டர் ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அனைவரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.
இங்கு லக்ஷ்மியை விளாசுபவர்கள் குறித்து தகவல் கிடைத்த பிறகே வர வேண்டும் என்று நினைத்தேன். சுமார் ஓராண்டு காலத்திற்கு பிறகு சைபர் செல் மற்றும் நாங்கள் அணுகிய ஏஜென்சியிடம் இருந்து ஆதாரம் கிடைத்துள்ளது.
அவரை தாக்கியதுடன், அனைத்து ட்வீட்டுகளுக்கும் கமெண்ட் அடிக்கும் சில ட்விட்டர் ஹேண்டில்கள் ஒரே லொகேஷனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹேண்டில்களை ஒரே நபர் தான் பயன்படுத்துகிறார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. எங்கள் உறவினர் ஒருவர் தான் இதை எல்லாம் செய்து வருவதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது. அந்த நபர் மீது ஏற்கனவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது.
ஆனால் ஆதாரம் இல்லாததால் சும்மா இருந்தோம். தற்போது கிடைத்துவிட்டது. ஆனால் கிரிமினல் புத்தியுள்ளவர்களை நல்லவர்களாக்க கல்வி உதவவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தன்னை ஆன்லைனில் தாக்கி வந்தவர் யார் என்பதை ஏற்கனவே கணிதிருந்ததாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உறவினரே இப்படி செய்துள்ளது குறித்து அறிந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் திட்டி தீர்த்து வருகின்றனர்.