மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிற்காக ஜார்ஜியாவிற்கு சென்றிருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை தளபதி 65 படக்குழுவினர் நேற்று முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று நடிகர் விஜய் நேரடியாக மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த விவேக் திருவுருவ படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.