சன் தொலைக்காட்சியில் ரோஜா, வானத்தை போல, சித்தி என நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி அந்த தொலைக்காட்சி இளம் நடிகர்களின் நடிப்பில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் அன்பே வா. இதில் முக்கிய நாயகியாக நடிப்பவர் பூமிகா என்கிற டெல்னா டேவிஸ்.
இவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாராம். ஆனால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள தற்போது குணமாகியுள்ளாராம்.
ஆனால் என்ன சோகம் என்றால் அவரது குடும்பத்தார் தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவரே பதிவு செய்துள்ளார்.