நாட்டில் இன்று 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நாட்டில் இன்று 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 102,271ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதேவேளை 7050 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.