மது போதையில் வாகனம் செலுத்திய 558 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 08 மணி முதல் 12 மணிவரை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.