மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு மூக்கின் மேல் சொர சொரப்பாக கரும்புள்ளிகள் காணப்படுவதுண்டு.

இது மூக்கின் அழகினை கெடுத்து விடுகின்றது.

அந்தவகையில் மூக்கின் மேல் இருக்கும் அசிங்கமான கரும்புள்ளிகளைப் போக்கும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. உப்பு – 1/4 டீஸ்பூன்
  2. வெள்ளை க்ளே – 1/2 டீஸ்பூன்
  3. தயிர் – 1/4 டீஸ்பூன்
  4. ஒட்டும் பேப்பர்
  5. டூத் பேஸ்ட் டூத் பிரஷ்

செய்முறை

முதலில் டூத் பேஸ்ட்டில் உப்பு சேர்த்து, டூத் பிரஷ் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.

பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்பு பேண்டேஜ் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தின் மீது 5 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த இடத்தில் க்ளே பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து தடவி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் விரைவில் மறையும்.

இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகளின்றி அழகாக இருக்கும்.