கம்பஹா – வெலிசற கடற்படை முகாமிலுள்ள உடற்பயிற்சி பிரிவில் சேவையாற்றிவந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் படுக்கையறையிலேயே உயிரிழந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது உடலில் நடத்தப்பட்ட பரிசோதகையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை உயிரிழந்த குறித்த நபர் விசேட முறைமையில் கடற்படையில் இணைந்து பண்யாற்றிவந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.