உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தொற்று இரண்டாவது அலையை இந்தியா சந்தித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தில் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நார்வே நாட்டைச் சார்ந்த ஏர்லண்ட் நெஸ் என்ற மலையேற்ற வீரர், எவரெஸ்ட் சிகரத்தின் அடியிலுள்ள முகாமில் தங்கி இருந்துள்ளார். இதன்போது அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அவரை சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தரைதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவரின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏனைய மலையேற்ற குழுவினரை என்ன செய்வது என்று நேபாள அரசு ஆலோசித்து வருகிறது.