இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3000 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.
ஒட்சிசன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்த கொரோனா உயிரிழப்புகள் முதல் முறையாக நேற்று அதிகளவு பதிவாகியுள்ளது. கடந்த ஏழு நாட்களாக இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.
அதன்படி டெல்லியில் செவ்வாயன்று 381 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66,358 ஆக பதிவாகியுள்ளன.
இதேவேளை கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு பல நாடு உதவி கரம் நீட்டிவரும்நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் உச்சம் மே மாத நடுப்பகுதியில் இருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.