கொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்கள் பெருமளவு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் விரைவுபடுத்தி வருகின்றது.
ஆனால் சிலருக்கு தடுப்பூசி குறித்து பல சந்தேகங்கள் உள்ளது. அதிலும் சிலருக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுவதுண்டு.
அந்தவகையில் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம.
தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்கள் இரத்த தானம் செய்ய முடியுமா?
அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இனோவா இரத்த நன்கொடை சேவைகள் சங்கமும் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நீங்கள் ரத்த தானம் மட்டுமல்ல, பிளேட்லெட்டுகள், ஏபி உயரடுக்கு பிளாஸ்மா வரை தானம் செய்ய முடியும்.
எத்தனை நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம் ?
நீங்கள் எந்தவித கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியும் இல்லாதவராக இருந்தால், நலமுடன் இருப்பவராக இருந்தால், எந்தவித கால இடைவெளியும் தேவையில்லை.
ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உணவு மற்றும் மருந்து போன்றவற்றில் கட்டுப்பாட்டுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தால் அவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்தப்பட்ட பின்பே செய்ய முடியும்.
குறிப்பு
நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால், ஒருவேளை ரத்ததானம் செய்ய விரும்பினால் ரத்த வங்கி மற்றும் தடுப்பூசி மையங்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி ரத்த தானம் செய்யுங்கள்.