ஜாங்கிரி போல கவர்ந்து இழுக்கும் நிவேதா பெத்துராஜ்.!

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.

இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது.

இந்நிலையில், இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார். தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார்.

நிவேதா பெத்துராஜ் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)