கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் உருவாக்கிய கொரோனா நாடு முழுவதும் பரவியது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் பரவத் துவங்கியது. இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின.
தொடர்ந்து, கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்தது. கொரானா வைரஸை கட்டுப்படுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால், ஒரு கட்டத்தில் கொரோனாவால் கட்டுப்படுத்த முடியாமல் ஊரடங்கு அறிவித்தன.
பின்னர், சிறிது சிறிதாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சமடைய துவங்கியுள்ளது. உருமாறிய கொரோனாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், தற்போது பிரபலங்கள் பலரும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை நதியா ஒரு புத்தகத்தை கையில் வைத்தபடி அமர்ந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நீங்கள் வீட்டில் மாட்டி கொண்டு இருக்கவில்லை. அங்கே தான் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.” என்று தெரிவித்து இருக்கிறார்.