உணவு சாப்பிடும் போது பலரும் ஊறுகாய் சேர்த்து கொள்வதை விரும்புகிறார்கள்.
தினமும் ஊறுகாய் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது.
ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள்.
அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.
ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.