மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இயக்குனர் கே.வி. ஆனந்தின் உடலை கண்ணாடி வழியே அதவானித்து குடும்பத்தினர் அழுதுள்ளனர்.
நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், தானே காரை ஓட்டிவந்து மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 3 மணிக்கு உயிரிழந்தார்.
இவரது மனைவி மற்றும் மகள்களுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி கே.வி.ஆனந்திற்கும் கொரோனா உறுதியான நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் நெஞ்சுவலி ஏற்படவே இவ்வாறு மருத்துவமனையில் தானே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் இருந்து நேரடியாக உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்லாமல் மயானத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
அதன்படியே ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில், மின்மயானத்துக்குச் செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டின் வாசலிலேயே ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது.
அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
பின்பு சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளது.