மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அங்குள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.
மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்த நிலையில், அவர் 9 வார (2 மாத) கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் வயதை மருத்துவர்கள் கேட்டறிக்கையில், அவருக்கு 17 வயது ஆகிறது என்பது உறுதியானது.
இதனையடுத்து, மருத்துவர்கள் மயிலாடுதுறை மகளிர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, மருத்துவமனைக்கு காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி தலைமையிலான காவல் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சிறுமியை காதல் வலையில் ஏமாற்றி அவரை ஆக்கூர் தெற்கு தெருவை சார்ந்த பவுன்ராஜ் (வயது 21) பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பவுன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.