ஹர்பஜன் சிங், லாஸ்லியாவின் பிரன்ஸ் பட மேக்கிங் வீடியோ.!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன் மூலம் இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில், இந்திய கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பாலா என பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில்தான் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.