காவல் நிலைய அதிகாரிகள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

எதிமலை காவல் நிலைய அதிகாரிகள் 56 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 30 பேருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.