அஞ்சான் படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனாவின் இரண்டாவது அலை நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரபலங்களும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் நிலையில் நேற்றைய தினம், இயக்குனர் கே.வி.ஆனந்த் உயிரிழந்த நிலையில் இன்றும் மற்றொரு பிரபலம் உயிரிழந்தள்ளார்.

ஆம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால்(52) கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவராவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.