முல்லைத்தீவு தீ விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு ஒரு கடையும் பகுதியளவில் சேதமடைந்தது. இந்நிலையில் முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முத்துஐயன்கட்டினனை சேர்ந்த 72 வயதுடைய செல்லப்பா அரிராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.