புதிய கொரோனாவால் உயிரிழந்த 9 பேர் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, கரந்தன பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ருவான்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், தேவாலகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், யக்வில பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவரும், வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.