தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக். கடந்த 16ஆம் தேதி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
நடிகர் விவேக் மரணம்
ஆனாலும் ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 59 வயதே ஆன நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் சினிமாவையும் சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மரக்கன்றுகள் நட்டு
அவரது உடலுக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவாக பல இடங்களில் ரசிகர்களும் திரைத்துறை நட்சத்திரங்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
பங்கேற்க முடியவில்லை
இந்நிலையில் விவேக்குடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் விஜய் அப்போது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார்.
இதன் காரணமாக நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. நாடு திரும்பிய விஜய் இந்நிலையில் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்த நடிகர் விஜய் கடந்த 25 ஆம் தேதி ஜார்ஜியாவில் இருந்து நாடு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
குடும்பத்தினருக்கு ஆறுதல்
ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய அடுத்த நாளே நடிகர் விஜய் நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மனைவியிடம் விஜய் பேசியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.