தெலுங்கு சினிமாவுடைய முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இணைந்து இந்தி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி இருக்கின்றனர். இதற்கு பிட்டக்கதலு என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜோயா அக்தர் ஆகிய நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் வசூல் ரீதியாக மிகுந்த வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து, வெப்சீரிஸ் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்தது.
இத்தகைய சூழலில், தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் 4 பேர் சுருதிஹாசன், அமலாபால், ஜகபதி பாபு, லட்சுமி மஞ்சு, ஈஷா அருட்பா ஆகியோரை வைத்து உருவாக்கியிருக்கும் பிட்ட கதலு என்ற டீஸர் யு டியூப்பில் வெளியிட்டு இருக்கின்றனர்.
துரோகம், காதல், காமம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் ரீதியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கியிருக்கும் இந்த தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த வெப்சீரிஸின் வீடியோ காட்சி ஒன்றை நடிகை அமலாபால் வெளியிட்டு இருக்கின்றார்.
View this post on Instagram