இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா 2ம் அலை படு தீவிரமாக பரவி வருவதால் மருத்துவர்கள் என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தோற்றால் பல பிரபலங்கள் கூட இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது மும்பை நவி பகுதியை சேர்ந்த இந்தியா ஆண் அழகன் ஜெகதீஷ் லாட் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி இந்தியவையே உலுக்கியுள்ளது.
உடல் கட்டுப்பாட்டில் மிகவும் கவனம் செலுத்திவந்த ஜெகதீஸ் லாட் எப்படி கொரோனாவால் இறந்தார். அவர் மிகவும் வலுவானவர் பல தேகப் பயிற்சிகள் செய்து வரும் நபர் என்பது யாவரும் அறிந்த விடையம். உடல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு இந்த நிலைமை என பலரும் பயந்து வருகின்றனர்.