புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறையில் ஒருவர் கைது… வெளியான முக்கிய தகவல்

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.