தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதை தொடர்ந்து திமுகவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் திமுக மற்றும் கூட்டணியை வாழ்த்தியுள்ளார்.
அந்த பதிவில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 3, 2021