தளபதி விஜய்யின் ஹிட்டான பாடலுக்கு நடனமாடிய சிம்பு, எப்போது தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, அப்படத்தை முடித்துவிட்டு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு முன்பு விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி NO.1 நடுவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்போது தளபதி விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு சிம்பு நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.