நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்… வெளியான தகவல்!

தேவையான பொருட்கள்

மாதுளை தோல் – 1 பழத்தினுடையது
ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் – 1 பழத்தினுடையது
துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் – 4-5
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

செய்முறை

பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்