புடவையில் ஜொலிக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள், யாரடி நீ மோஹினி மற்றும் பூவே பூச்சூடவா, செம்பருத்தி.

இதில் நடித்து வரும் நடிகைகள் ஷபானா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, நட்சத்திரா உள்ளிட்டோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

சமீபத்தில் நடந்த நடிகை சித்ராவின் திருமணத்திற்கு கூட பல விஷயங்களில் இவர்கள் அனைவரும் இணைந்து தான் நண்பர்களாக உதவியுள்ளனர்.

இதனை அவரே கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செம்பருத்தி சீரியல் ஷாபனாவை தவிர, மற்ற அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதுவும் அழகிய புடவையில் குரூப்பாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த அவர்களது ரசிகர்கள் அழகாக கமெண்ட் செய்து வருகின்றனர்.