தாரமங்கலம் அருகே 9 வயது சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாக அழைத்துச் சென்று கொடூரன், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. கஞ்சா போதையில் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி அலைந்தனர். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த தனபால் என்ற ஒருவன் சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பார்க்கையில், சிறுமி தலையில் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். தனபால் தலைமறைவான நிலையில், காவல்துறையினருக்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், தனபால் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், இன்று அவனை கைது செய்தனர்.
விசாரணையில், எந்த நேரமும் கஞ்சா போதையில் இருந்த கஞ்சா குடிக்கி தனபால், சம்பவத்தன்று சிறுமிக்கு நுங்கு விட்டுத் தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை வெளியே சொல்லக் கூடாது என்று கழுத்தை நெரித்து எச்சரித்த நிலையில், ஏற்கனவே காமுகனின் பலாத்கார கொடூரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மூச்சடைத்து மயங்கியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தலையில் ஈவுஇரக்கமின்றி கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளான். இதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தற்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான். ஏற்கனவே தனபால் கஞ்சா போதையில் ஆடுகள் திருடுவது, செல்போன்கள் திருடுவது, சிறுமிகளிடம் பாலியல் ரீதியான ஆசை காட்டி கஞ்சா போதையில் தொல்லை கொடுப்பது என்று பல்வேறு அட்டகாசங்களை செய்து வந்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கஞ்சா குடிக்கிகள் ஊருக்கு இப்படி 4 பேர் இருக்கும் நிலையில், அவனது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போதே எதோ ஒரு பெற்றோர் அவனை எச்சரித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தால் அல்லது ஊரே ஒன்று சேர்ந்து சம்ஹாரம் செய்திருந்தால் இன்று சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.
இது போன்ற குற்றவாளிகள் சிறைக்கு அழைத்து சொல்லப்படும்போது தப்பித்து செல்ல முயற்சித்து, காவல் துறையினரால் பாதுகாப்பு கருதி என்கவுண்டர் செய்யப்பட்டாலும் தப்பில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கொந்தளித்து வேதனை தெரிவிக்கின்றனர்.