ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோயனபெட்டா கிராமத்தை சேர்ந்த ஆசிரிநாயுடு விஜயவாடாவில் தனது குடும்பத்தினருடன் கூலி வேலை செய்து வந்தார்.
திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தொற்று இருப்பது உறுதியானது.
அவரது குடும்பத்தினருக்கும் நடத்திய பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரிநாயுடு தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்.
அவர்களுக்கு தொற்று இருப்பதால் கிராமத்தினர் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆசிரிநாயுடு உடல்நிலை கவலைக்கிடமானது. அப்போது, கிராமத்தினர் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லை.
அதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர். இந்நிலையில், ஆசிரிநாயுடு நேற்று முன்தினம் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.
தனது தந்தை மூச்சு விட முடியாமல் துடித்ததை பார்த்து வேதனை அடைந்த அவரது மகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு தந்தை அருகே ஓடினார்.
உடன் அவரது தாயும் சென்றார். அப்போது அவர் மனைவி, மகளை தன்னிடம் வரவேண்டாம் என்ற கதறினார். ஆனாலும் அவரது மகள் அருகே சென்று அவரது வாயில் தண்ணீர் ஊற்றினர்.
ஆனால் சில நிமிடங்களிலேயே மகள், மனைவி கண்ணெதிரே ஆசிரிநாயுடு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.