பிரான்சில் கொரோனா தொற்று விகிதம் வரும் ஜுன் மாதத்தில் உச்சத்தை தொடும் என்று ஆராய்சியாளர் பஸ்கால் கிரெப்பே எச்சரித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் இன்னும் சகஜ நிலைமைக்கு திரும்பவில்லை.
இதன் காரணமாக நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு அமுலில் உள்ளது. ஆனால், நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், பரவல் குறைவாக உள்ளதால், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் அங்கு சென்று வருகிறது. இதை குறிப்பிட்டு குறியுள்ள பேராசிரியரும், ஆராய்சியாளருமான பஸ்கால் கிரெப்பே இப்போது இருக்கும் நிலையே பிரான்சில் நீடித்தால், வரும் ஜுன் மாதம் கடும் விளைவை பிரான்ஸ் சந்திக்கும். அரசாங்கம் முதலில் உணவகங்களின் வெளிப்பகுதிகளையும், பின்னர் உடபுறங்களையும் திறக்க இருக்கும் நிலையில், முகக்கவசங்கள் இல்லாமல், மக்கள் உணவருந்தி வருவதால், வரும் ஜுன் மாதம் பிரான்ஸ் பெரும் கொரோனாத் தொற்றைச் சந்திக் நேரும் என எச்சரித்துள்ளார்.