நாடு முழுவதும் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக கொரோனா தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது.
ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலமும் நேர்கிறது.
இந்த நிலையில் மறைந்த நடிகர் முரளியின் மகனும், தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்துவரும் இளம் நடிகருமான அதர்வா அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நடிகர் அதர்வா தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா பரிசோதனையில் எனக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
நான் நல்லபடியாக குணமடைந்து அதிலிருந்து மீண்டு விட்டேன். இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை மேற்கொள்கிறேன். கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.